க.பொ.த உயர் தரப் பெறுபேறு தாமதமடையும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 7 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள் தரவுத் தளத்தில் பதிவேற்றப்பட்டதன் பின்னர், இஸட் புள்ளிகளை மீளவும் சரிபார்க்கும் அனுகுமுறை தற்போது நடை பெறுவதாகவும் இச்செயற்பாடு முடிவடைய சில தினங்கள் தேவைப்படும் என பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள தமிழ் புதுவருடத்தில் வெளியிடப்படும் என முன்னர் கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். அதன் பிறகு ஏப்ரல் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது ஏப்ரல் கடந்து மே முதல் வாரத்தை உள்ளடக்கியதாக ஏழு நாட்களுக்குள் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.