வெள்ளிக்கிழமைகளில் சுகாதாரத் துறையினருக்கு எரிபொருள் வழங்கப்படும் என அறிவித்தல் விடுத்திருந்த பின்னணியில், இன்று பல நிலையங்களில் சுகாதாரத் துறையினருக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் 74 நிலையங்களில் இவ்வாறு எரிபொருள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும பல நிலையங்களில் எரிபொருள் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் திட்டங்கள் எவ்வாறு தோல்வி அடைகின்றன என்பதற்கு இந்த திட்டமும் சிறந்த உதாரணம் என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.