கொரோனா தொற்றின் புதிய நிலமைகளின் கீழ் புதி ய கட்டுப்பாடுகள் உள்ளடங்கிய வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பல்கலைக்கழகங்கள் மூடப்படும், தனியார் டியுசன் நிலையங்கள் மூடப்படும், பாடசாலைகள் 50% மாத்திரம் இயங்கும். முன்பள்ளிகள் 50% இயங்கலாம்.
இந்தக் கட்டுப்பாடுகள் மே 31 வரை அமுலில் இருக்கும்
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளுக்காக, வீட்டிலிருந்து வெளியே செல்ல 2 பேருக்கு மாத்திரம் அனுமதி.
பேருந்து, தொடருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துகளில், இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் பயணிக்க முடியும்.
முச்சக்கர வண்டிகளிலும் பயணிக்கக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில், தேவைக்கேற்றவாறு பணிக்குழாமினரை சேவையில் ஈடுபடுத்த முடியும். வீடுகளில் இருந்து பணிபுரிவதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.