இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் சிபெட்கோ பெற்றோல் நிலையங்களுக்கு 92 ஒக்டேன் பெற்றோல் விநியோகம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஒக்டேன் 92 எரிபொருள் விநியோகிக்கப்படும் நிரப்பு நிலையங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் வியாழன் (21ஆம் திகதி) முதல் எரிபொருள் வெளியிடப்படும் எனவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை சிபெட்கோ பொருட்படுத்தாது எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.குமார ராஜபக்ஷ நேற்று (18) தெரிவித்தார்.
வியாழன் முதல் கியூஆர் குறியீடு மற்றும் வாகனப் பதிவு எண் அடிப்படையில் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்றும், தற்போது வரிசையில் நிற்கும் மக்கள் வெளியேற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாகனப் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கமான 0, 1 மற்றும் 2 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகன உரிமையாளர்கள் மாத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை, ஒக்டேன் 92 எரிபொருள் விநியோகம் செய்யும் நிரப்பு நிலையங்களின் பட்டியல் கீழே..