பாடசாலைகள் மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை கணிசமாக உயர்ந்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 27 புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர்களின் வருகை 80 வீதமாக இருக்கும் அதேவேளை மாணவர்களின் வருகை 72 வீதமாக அதிகரித்துள்ளது என்றார்.
மேலும், பாடசாலை வருகை அளவை அதிகரிக்க போக்குவரத்து திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் பாடசாலை வேன் உரிமையாளர்களுடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
சுசில் பிரேமஜயந்த.
எதிர்வரும் வாரங்களில் பாடசாலைகள் வழமைக்குத் திரும்பும் என்றும், அதற்கேற்ப பரீட்சைகள் நடத்தப்படும் என்றும் பிரேமஜயந்த உறுதியளித்தார். இனியும் பாடசாலைகளை மூடுவதற்கு முடியாது என்றார்.
“பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, ஆனால் அடுத்த ஆண்டு அவை சரியான நேரத்தில் நடத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.