ஐரோப்பியாவில் Monkeypox குரங்கு காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மரணம் ஸ்பெயின் இல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் 4,298 பேர் குரங்கு காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் உலகம் முழுவதும் 78 நாடுகளில் பரவி மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால், உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் உலக சுகாதார அவசர நிலையை அறிவித்தது.
குரங்கு நோய் முதன்முதலில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.