பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் பெண்கள் பலர் தமது வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழில்களை நாடியுள்ளதாக வெளிநாட்டு செய்தி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் ANI செய்தி நிறுவனமே இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக பெண்கள் பாலியல் தொழில்களை நாடும் நிலை அகரித்துள்ளதாகவும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் Standup Movement lanka என்ற அமைப்பு குறித்த செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் இலங்கையில் பாலியல் தொழிற் துறை 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக ANI தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் தொழில்வாய்ப்பை இழக்கும் பெண்கள் மசாஜ் நிலையங்களுக்கு தொழிலுக்கு செல்வதுடன் பாலியல் ரீதியான தொழில்களில் ஈடுபடுவதாகவும் குறித்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.