உணவின்றி மந்த போசனையடைந்த 40000 பேருக்கு சேலைன் மூலம் உணவு

இலங்கையில் சுமார் 40/ஆயிரம் பேர் உணவு உட்கொள்ள வழியின்றி மந்த போசனையால் சேலைன் மூலம் உணவு பெறுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுவதாகவும் 75000 குடும்பங்கள் தினசரி என்ன சாப்பிடுவது என்று தெரியாமல், உணவு நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலைகளை வெளியிட்டுள்ளார்.

தற்போது நிலவும் நெருக்கடிக்கு உரிய தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் இந்த நிலைமை மிகவும் மோசமானதாக அமையும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!