02 ஆகஸ்ட் 2022 முதல் ஜோன் கீல்ஸ் குழுமத்திற்குள் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் மற்றொரு முக்கியமான படியாக, சமமான மகப்பேறு விடுமுறை வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தை பிறக்கும் போதோ அல்லது குழந்தையை தத்தெடுக்கும் போதோ குழந்தையின் தாய்க்கு வழங்கப்படும் 100 நாள் மகப்பேறு விடுமுறை அப்படியே தொடரும் என்றும், இதுவரை 5 நாட்களாக இருந்த மகப்பேறு விடுமுறை 100 நாட்களாக தந்தைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தையைப் பராமரிப்பதில் தாய் மற்றும் தந்தை இருவருக்கும் பொறுப்புகள் இருப்பதை உணர்ந்து, சமத்துவத்தை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என நிறுவனம் தெரிவித்துள்ளது.. மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குழந்தை பராமரிப்பு தொடர்பான தனிப்பட்ட சூழ்நிலைகள் இருப்பதால், இந்த 100 நாள் விடுமுறையை நெகிழ்வாக எடுத்துக்கொள்ளும் வகையில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
_