ஹிங்குரகொட வலயக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, கல்வி அலுவலகத்தை நேற்று (26) தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலன்னருவ பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர் டாக்டர் டபிள்யூ.கே.டபிள்யூ.எஸ். குமாரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் கொழும்பு புறநகரில் வசிப்பவர்.
அவர் சில நாட்களுக்கு முன்னர் அவர் கொழும்பிலிருந்து ஹிங்குரங்கொடவிற்கு சேவைக்கு சமூகமளித்தது மீண்டும் கொழும்பிற்கு திரும்பியுள்ளார்.
கொழும்பு கிரிபத்கொட தழுகம பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது அங்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருடன் தொடர்பிலிருந்த 81 பேர் பிசிஆர் பரிசோதனைக்குட்படத்தப்பட்டுள்ளனர். பெறுபேறு வரும்வரை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 51 பேர் கல்விக் காரியாலயத்தின் ஊழியர்கள், 30 பேர் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களாவர்.
.