பாடசாலைகளை உரிய முறையில் நடாத்துவதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
இன்று காலை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். இந்த ஊடகவியலாளர் மாநாடு சூம் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சுகாதார அமைச்சு வெளியிட்ட பாடசாலைகளுக்கான வழிகாட்டல்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக இருந்ததை ஏற்றுக் கொண்ட அவர், அதற்கு எந்தவகையிலும் பொருந்தாத சில நியாயங்களை அவர் முன்வைத்தார்.
அத்தோடு பாடசாலைகளுக்கு சுகாதார ஏற்பாடுகளை மேற்கொள்ள போதுமான நிதி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
.