பொது நிர்வாக சுற்றுநிருபம் 18/2020 இற்கு அமைவாக உத்தியோகத்தர்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய அரசகரும மொழித்தேர்ச்சி
———————–
அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் முன்னோடி நிறுவன அரசகரும மொழிகள் திணைக்களமானது மேற்குறித்த சுற்றுநிருபத்திற்கு அமைவாக அரச மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு மொழிப் பாடநெறிகளை நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளது
2. அதற்கமைவாக உங்களது நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுக்கு மொழிப் பாடநெறிகளை ஏற்பாடு செய்யக் கருதுவதாயின் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்திற்கு அமையத் துரிதமாக விண்ணப்பிக்குமாறு தயவுடன் அறியத் தருகின்றேன்.
பாடநெறியின் நிபந்தனைகள்
பொ.நி. சுற்றுநிருபம் பிரகாரம் குறித்த ஒரு சேவை மட்டத்திற்குரிய குழுவில் 30 – 50 இற்கு இடைப்பட்ட விண்ணப்பதாரிகள் இருத்தல் வேண்டும்
ஒரு குழுவிற்குப் போதிய உத்தியோகத்தர்கள் குறித்த நிறுவனங்களில் இல்லாவிடின் வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து உத்தியோகத்தர்களைத் தொடர்புபடுத்தி, இப் பாடநெறியை ஏற்பாடு செய்து கொள்ளலாம்
* பாடநெறியைத் துரிதமாக நிறைவு செய்ய வேண்டிய தேவைப்பாட்டின் அடிப்படையில் பாடநெறி நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை (உரிய மணித்தியாலங்கள் உள்ளடங்கும்
வகையில் திணைக்களத் தலைவர் தீர்மானிக்கலாம்
நிறுவனத் தலைவரின் தற்றுணிபின் படி வார நாட்களில் அல்லது வார இறுதி நாட்களில் வகுப்புக்களை நடாத்த முடியும் என்பதோடு, நாளொன்றிற்கு வகுப்பு நடைபெறும் கால எல்லையானது கட்டாயமாக 06 மணித்தியாலங்களாக அல்லது அதற்கு மேற்பட்டதாக இருத்தல் வேண்டும்
* வளவாளர்களை ஈடுபடுத்தல் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகள் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும்
உத்தியோகத்தர்களது
வரவு அறிக்கையானது வளவாளர்களின் வருகை பாடநெறியை மற்றும் வெளியேறல் நடாத்தும் குறித்த வளவாளர்களினாலும் அறிக்கைகளை உரிய நிறுவனத்தினாலும் பெற்றுக் கொள்ளல் வேண்டும் என்பதுடன், இவ் அறிக்கைகளை உரிய முறையில் அரசகரும மொழிகள் திணைக்களத்திற்குக் கிடைக்கச் செய்தல் வேண்டும்
பாடநெறியின் அனைத்து மேற்பார்வை நடவடிக்கைகளும் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும்
இப் பாடநெறிகளின் பொருட்டு விண்ணப்பதாரிகள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது என்பதுடன், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள A மற்றும் : படிவங்களைப் பூரணப்படுத்தி நிறுவனத் தலைவரினால் அரசகரும மொழிகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஒவ்வொரு மட்டத்திற்கும் வெவ்வேறாகப் படிவங்களை சமர்ப்பித்தல் வேண்டும் என்பதோடு, உரிய முறையில் பூரணமாக்கப்பட்ட A மற்றும் B படிவங்களை அரசகரும மொழிகள் ஆணையாளர் நாயகம், அரசகரும மொழிகள் திணைக்களம், 3417, கோட்டே வீதி, ராஜகிரிய” எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வாறு இயலாத சந்தர்ப்பத்தில் படிவங்களை ஸ்கேன் Scan) செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் (கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ‘அரசகரும மொழிப் பயிற்சிப் பாடநெறிகள் எனக் குறிப்பிடுக
அரசகரும மொழித் தேர்ச்சியை இலக்காகக் கொண்ட இப் பாடநெறிகளின் பொறுப்பானது அரசகரும மொழிகள் திணைக்களம் மற்றும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் ஏற்கப்படுவதோடு, வேறு எந்தவொரு அரச நிறுவனத்திற்கோ அல்லது தனியார் நிறுவனத்திற்கோ இதற்கான அதிகாரம் கையளிக்கப்படவில்லை என்பதைத் தயவுடன் அறியத் தருகின்றேன்
closing date please