இவ்வருடம் உள்ளீர்ப்பதற்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்த 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரம் எழுதிய மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை மற்றும் உள்ளீர்ப்பு செயன்முறைகள் அடுத்த வருடம் முதல் தவணை வரை பிற்போடப்படும் என கல்வி அமைச்சின் தேசிய கல்வியியல் கல்லூரி வட்டாங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருடம் 4200 மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. எனினும் தற்போதைய கோவிட்19 தொற்று அதிகரிப்பு காரணமாக நாட்டின் அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளும் தனிமைப்படுத்தல் மையங்களாகவும், சில கல்லூரிகள் சிகிச்சை மையங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் இந்த உள்ளீர்ப்பு செயன்முறை சாத்தியற்றது என கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிலமை சீரடைந்தால் 2021 முதல் தவணையளவில் உள்ளீர்ப்பு நடைபெறலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.