நடைபெற்று முடிந்த க.பொ.த உயர் தரப் பரீட்சையின் விடைப் பத்திரங்களைத் திருத்தும் பணிகள் சுகாதார துறையின் ஆலோசனையின் பின்னர் முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடவகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்னும் இருவாரங்களில் சுகாதாரத் துறையுடன் கலந்துரையாடி விடைப் பத்திங்களை திருத்துவதற்கான பொருத்தமான காலப் பகுதி குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
க.பொ.த உயர் தரப் பரீட்சை வெற்றிகரமாக நடாத்துவதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் இதன் போது அவர் நன்றி தெரிவித்தார்.
.