கொரோனா பரவல் எச்சரிக்கைக் கட்டங்களும்
கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளும்
கொரோனா தொற்று நிலைமை மற்றும் அதன் ஆபத்து தொடர்பாகவும் அதன் போது நாட்டின் நிறுவனங்கள் துறைகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் வழிகாட்டல் ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இவ்வழியாட்டலில் இலங்கையில் கொரோனா தொற்று நிலமையை நான்கு கட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஓவ்வொரு கட்டத்திலும் சமூக செயற்பாடுகள் நிறுவன செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கட்டம் ஒன்று: நாட்டுக்கு வெளியிலிருந்து வருபர் அடையாளம் காணப்படல், கொத்தணி இல்லை
கட்டம் இரண்டு: ஒரு கொத்தணி
கட்டம் மூன்று: பல மாவட்டங்களிலும் பல கொத்தணிகள்
கட்டம் நான்கு: சமூகபரவல். கொத்தணியுடன் தொடர்பில்லாத தொற்றுக்கள்
இந்த ஒவ்வொரு கட்டங்களிலும் கல்வித்துறை சார்ந்த அமைப்புக்களின் தொழிற்பாடுகள் தொடர்பாக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிகர்டல்கள் பின்வருமாறு:
முன்பள்ளி
கட்டம் ஒன்று: சுகாதார நடைமுறைகளுடன் வழமையான தொழிற்பாடு
கட்டம் இரண்டு: 75 வீத செயற்பாடு
கட்டம் மூன்று: 50 வீத செயற்பாடு
கட்டம் நான்கு: மூடப்படல் வேண்டும்
பாடசாலை
கட்டம் ஒன்று: சுகாதார நடைமுறைகளுடன் வழமையான தொழிற்பாடு
கட்டம் இரண்டு: தரம் ஒன்பது மற்றும் அதற்கு மேல்
கட்டம் மூன்று: முழுமையாக மூடப்படல் வேண்டும்
கட்டம் நான்கு: முழுமையாக மூடப்படல் வேண்டும்
பல்கலைக்கழகங்கள் உட்பட உயர் கல்வி நிலையங்கள்
கட்டம் ஒன்று: சுகாதார நடைமுறைகளுடன் வழமையான தொழிற்பாடு
கட்டம் இரண்டு: 50 வீத செயற்பாடு
கட்டம் மூன்று: முழுமையாக மூடப்படல் வேண்டும்
கட்டம் நான்கு: முழுமையாக மூடப்படல் வேண்டும்
தனியார் வகுப்புக்கள்
கட்டம் ஒன்று: சுகாதார நடைமுறைகளுடன் வழமையான தொழிற்பாடு
கட்டம் இரண்டு: 50 வீத செயற்பாடு
கட்டம் மூன்று: முழுமையாக மூடப்படல் வேண்டும்
கட்டம் நான்கு: முழுமையாக மூடப்படல் வேண்டும்