இதன்படி, ஆசிரியர் கல்வி நிர்வாகிகள் இந்த கொரோனா விடுமுறையில் அதற்கான பணிகளை ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு பொறுப்புக்களைப் பகிர்ந்தளித்துள்ளது.
கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி முகாமைத்துவ கிளையின் பணிப்பாளர், வெளியிட்டுள்ள 2020/11/2 ஆம் திகதி இடப்பட்ட கடிதத்தில் ஆசிரியர்கள் மொடியுல்களை தொலைக் கல்வி அடிப்படையில் சம்பூர்ணப்படுத்தக் கூடிய வகையில் மொடியுல்களைத் தயாரிப்பதற்கான வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஆசிரியர் கல்விக்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்தத்தக்க வகையில் வீடியோ முன்வைப்புக்கள் மற்றும் ஒப்படைகள் மற்றும் வேறு வழிமுறைகளின் அடிப்படையில் சூம், வட்அப், வைபர் முதலான தொழிநுட்ப வழிமுறையில் வழங்க முடியுமான வகையில் அனைத்து மொடியுல்களையும் தயாரிப்பதற்கு திட்டம் வகுக்ககப்பட்டுள்ளதோடு, அதற்கான கடமைகளும் பொறுப்புக்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் சம்பூர்ணப்படுத்த வேண்டிய 20 மொடியுல்களுக்கும் 20 ஆசிரியர் அபிவிருத்தி மத்திய நிலையங்கள் பொறுப்புச்சாட்டப்பட்டன. ஏனைய மத்திய நிலையங்களின் முகாமையாளர்கள் அவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் துரிய தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து ஆசிரியர் அபிவிருத்தி மத்திய நிலையங்களுக்கு மொடியுல்களைக் கற்பிப்பதற்கான இறுதி ஆவணங்களை ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்தோடு, ஆசிரியர்களுக்கான மதிப்பீட்டு செயற்றிட்டத்தை தயாரிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
எனவே, இதனடிப்படையில் ஆசிரியர்கள் சம்பூர்ணப்படுத்த வேண்டிய மொடியுல்கள் விரைவில் தொலைக் கல்வி அடிப்படையில் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.