இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் 40,000 மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை கடன் திட்டத்தின் கீழ் வழங்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
மடிக்கணினிகளை அதிகபட்சமாக ரூ .100,000 வரை வாங்க முடியும் என்றும் மாணவர்கள் பட்டப்படிப்பு முடியும் வரை மாத வட்டி தவணை மட்டுமே செலுத்த வேண்டும்.
மடிக் கணினிக்கான தொகையை பட்டப்படிப்புக்குப் பிறகு செலுத்த வேண்டும்.
அரசுக்கு சொந்தமான வங்கியுடன் இது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக மிகக் குறைந்த வட்டி விகிதத்தை வசூலிக்கவும் வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சில நிபந்தனைகளின் கீழ் மடிக்கணினிகளை வழங்குவதற்காக நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும், ஆனால் மாணவர்கள் எந்த நிறுவனத்திலிருந்தும் மடிக்கணினிகளை வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.