ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தாலும், அந்த பகுதிகளிலிருந்து க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார்.
“19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மதுகம பகுதியில் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு அமரும் மாணவர்கள் இந்த பகுதிகளில் பரீட்சைக்கு செல்வது தொடர்பாகவோ தங்குவது தொடர்பாகவோ பிரச்சினைகள் இல்லை என்றார்.