ரத்னாவலி பாலிகா விதரதியாலயத்தில் கற்கும் மாணவிக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மினுவாங்கொட சுகாதார வைத்திய அதிகாரி பாடசாலைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை மினுவங்கொடவில் உள்ள பிராண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணிபுரிகிறார் என்றும் தந்தை தொற்றுக்குள்ளாகியமையினால் மகளுக்கும் பரிசோதனை மேற்கொண்டதாகவும் இதன் போது அவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வகுப்பில் உள்ள ஏனைய மாணவிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்காக முகவரிகள் வழங்கப்பட்டதாகவ ரத்னாவாலி பாலிகா வித்யாலயத்தின் அதிபர் ஹேமா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.