நாளை க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள போதிலும் கடந்த வருடம் நடைபெற்ற பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப்புள்ளிகள் இன்னமும் வெளிவராமையிலால் பரீட்சார்த்திகள் நிர்க்கதியாகியுள்ளனர்.
கடந்த வருட பல்கலைக்கழக அனுமதியை உறுதிப்படுத்த முடியுமா அல்லது முடியாதா என்ற தீர்மானத்தை எட்டுவதற்கு வெட்டுப்புள்ளிகள் கட்டாயமானவை. வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுமாயின் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக உரிய தீர்மானம் எடுத்து, இவ்வருடம் இரண்டாவது அல்லது மூன்றாவது முறை பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள் பரீட்சைக்கு தோற்றுவது தொடர்பாக முடிவொன்றை எடுக்க முடியும்.
அதனடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இரு வாரம் என்ற காலக் கெடுவை விதித்து பரீட்சை ஆரம்பமாகுவதற்கு முன்னர் வெளியிடுவதாக உறுதி அளித்திருந்தது.
எனினும் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்னமும் வெளிவரவில்லை. இதன் காரணமாக குறிப்பாக, இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை தோற்றும் பரீட்சார்த்திகள் நிர்க்கதியாகியுள்ளனர்.