கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் படிக்கும் வகுப்பறையில் 42 மாணவர்கள் உட்பட 48 மாணவர்களில் எவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று சுகாதார அதிகாரிகள் பாடசாலை அதிபருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியின் வகுப்பைச் சேர்ந்த 42 பேரும் அருகிலுள்ள வகுப்பைச் சேர்ந்த மேலும் 6 மாணவர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் எவரும் இந்த வைரஸில் பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்
வகுப்பில் உள்ள 42 மாணவர்கள் நீர்கொழும்பில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர், மற்றயவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலை ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் பீ.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் அவற்றின் முடிவுகள் தொடர்பான அறிக்கைகள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது