சிரி ஜயவர்தனபுர, மொரட்டுவ மற்றும் வயம்ப ஆகிய பல்கலைக்கழங்களுக்கு புதிய உபவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ இந்நியமனங்களை வழங்கியுள்ளார்.
சிரி ஜயவர்தனபுர பல்கலைகழகத்திற்கு அப்பல்கலைக்கைழகத்தில் பதில் கடமையாற்றிய உபவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. குணவர்தன வும், வயம்ப பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் உதித் கே. ஜயசிங்ஹ அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.