பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்து நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் 5 ஆவது வழிகாட்டல் கடிகத்தை வெளியிட்டுள்ளார். 2020.06.10, 2020.06.22, 2020.07.23 மற்றும் 2020.07.07 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக 2020.07.28 ஆம் திகதியிடப்பட்ட வழிகாட்டலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டலை மையமாகக் கொண்டு மாகாணக் கல்வித் திணைக்களங்களோ, வலயக் கல்வி அலுவலகங்களோ வேறு வழிகாட்டல்கள் எதனையும் வெளியிடக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவோடு, அதிபர்கள் இவற்றை நடைமுறைப்படுத்துவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கல்வி அமைச்சு அறிவித்த விபரங்களை அடங்கியவகையில் வெளியிடப்பட்ட இவ்வழிகாட்டலில் பின்வரும் விடயங்கள் முக்கியமானவை.
பாடசாலையின் மொத்த மாணவர் எண்ணிக்கை 200ஐ விட குறைவாகவும் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணிக் கொள்ள முடியுமான பாடசாலைகள் அனைத்து மாணவர்களுக்கும் சாதாரண மற்றும் பொதுவான அடிப்படையில் நடாத்த வேண்டும்.
பாடசாலைகளின் மொத்த மாணவர் எண்ணிக்கை 200ஐ விட அதிகமானது எனில் பின்வரும் அடிப்படையில் பாடசாலை இயங்கும்
ஆரம்ப வகுப்புகள்
மொத்த மாணவர் எண்ணிக்கை 200 ஐ விட அதிகரித்த இடைநிலை வகுப்புகள்
இடைவேளை
பிற்பகல் 1.30 வரை நடைபெறும் பாடசாலைகளுக்கான இடைவேளை வழமைபோன்று
பிற்பகல் 3.30 வரை நடைபெறும் பாடசாலைகளில் மாணவர்களுக்கு 20 நிமிடங்களுக்கு அதிகரிக்காத இரண்டு இடைவேளைகள் வழங்கப்படல் வேண்டும்
ஆசிரியர்கள்
2020.08.10 அன்று முதல் அனைத்து கல்வி பணியணினரும் பாடசாலைகளுக்கு சமூகளிக்க வேண்டும். அவர்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள், மேற்பார்வை, ஒப்படைகளை பரீட்சித்தல் மற்றும் சுகாதார மற்றும் ஒழுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொறுப்புக்களை வழங்க வேண்டும்.
பிற்பகல் 3.30 வரை நேரசூசியில் பாடம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தவிரந்த ஏனைய ஆசிரியர்களின் கடமை நேரம் காலை 7.30 தொடக்கம் 1.30 வரையாகும்
தனிநபர்களுக்கிடையிலான இடைவெளியைப் பேணும் வகையிலும் காற்றோற்றம் கொண்டதாகவும் வகுப்பறையைத் தயார் செய்ய வேண்டும்.
கற்பித்தல் பணியல்லாத ஊழியர்கள் வழமை போன்று பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
பரீட்சைகளும் ஒப்படைகளும்
பாடசாலை மட்டக் கணிப்பீடு மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான தயார் படுத்தல் பரீட்சை தவிர்ந்த வேறு தவணைப் பரீட்சைகள் எதனையும் நடாத்துவது கூடாது.
வாரத்திற்கு ஒரு தடவை பாசடாலைகளுக்கு வரும் மாணவர்களுக்காக வீடுகளில் செய்யக் கூடிய ஒப்படைகளை, பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, உரிய ஆசிரியர்கள் அவற்றை மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
பாடசாலைச் சிற்றுண்டிக் சாலையை – சுகாதாரத் துறையினர் பாதுகாப்பானதாக உறுதிப்படுத்தும் வரை திறக்காதிருத்தல் வேண்டும்.
தொகுப்பு – ஜெஸார் ஜவ்பர்