வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒன்லைன் கற்றல் கற்பித்தலுக்கான குழுக்களில் வேறு நபர்கள் ஊடுருவியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செயலிகளில் உருவாக்கப்பட்டிருந்த கற்பித்தலுக்கான குழுக்களில் உள்நுழைந்து மாணவர்களின் இலங்கங்களுக்கு விரும்பத்தகாத படங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண அதிபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிபர்களின் கைபேசி இலக்கங்களை ஹக்” செய்து தரவுகளை திருடி மாணவர்கள், ஆசிரியர்களுடன் ஏனையவர்களுக்கும் தவறான
பொருத்தமற்ற தகவல்கள், படங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாரக அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில், வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் வே.த ஜெயந்தன் கருத்துத் தெரிவித்தார்.
கொரோனா அச்சுறுத்தலால் பாடசாலைகள் மூடப்பட்டதை அடுத்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை “சூம்” மற்றும் ‘வைபர்’ செயலிகள் ஊடாக முன்னெடுத்திருந்தோம். தற்போது இந்த செயலிகளின் குழுக்கள் ஊடாக எங்களின் அதிபர்கள் சங்க உறுப்பினர்களினதும், உறுப்பினர்கள் உறுப்பினர்கள் அல்லாத வேறு நபர்களினதும் கைத் தொலைபேசி இலக்கங்கள் ஹெக் செய்யப்பட்டு, தொடர்புடைய குழுவில் இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் தவறான தகவல்கள், பொருத்தமற்ற படங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிபர் சங்ததின் தலைவர் வே.த ஜெயந்தன் குறிப்பிட்டார்
இது அதிபர்களினதும் ஆசிரியர்களினம் புனிதத் தன்மைக்கு களங்கமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், எங்களின் அதிபர்கள் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும்
விரத்திக்கும் ஆளாகியிருக்கிறார்கள் இனிவரும் காலங்களிலும் இப்படியான நிகழ்வு கல்வி புலத்திலே நடைபெறுமாக இருந்தால் மாணவர் சமுதாயத்தின் மீது அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். அத்துடன், ஹக் செய்யப்பட்ட கைபேசி இலக்கங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.