தேசிய கல்வியியல் கல்லூரிகளை கட்டங்கட்டமாக ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய கல்வியியல் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்பட வில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதிஅறை முதலானவற்றை சுகாதார நெறிமுறைகளுக்கு ஏற்பட தயார்படுத்திக் கொண்டதன் பின்னர் இது தொடர்பாக தீர்மானிப்பதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
விடுதி அறைகளை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல்களை பீடாதிபதிகளுக்கு கல்வி அமைச்சு அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
கட்டுறுப் பயிற்சிக்காக பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள ஆசிரிய மாணவர்கள், தொடர்பாக பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகள் ஆரம்பமாகியதன் பின்னர் தீர்மானித்து அறிவிப்பதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.