க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை விரைவில் அனுப்பி வையுங்கள்.
அதிபர்களிடம் வேண்டுகோள்
புதிய பாடசாலைத் தவணை ஆரம்பமானதும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை முடியுமானளவு விரைவாக அனுப்பிவைக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக அதிபர்களிடம் கேட்டுள்ளார்.
ஆட்பதிவுத் திணைக்களம் ஒரு நாள் சேவை தவிர்ந்த ஏனைய சேவைகளை நேற்று ஆரம்பித்த். தவரையறுக்கப்பட்ட ஊழியர்களை மாத்திரம் வரவழைத்து இச்சேவைகள் வழங்கப்படுகின்றன. அடையாள அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
க.பொ.த மாணவர்களின் அடையாள அட்டைப் பணிகள் விரைவில் முடிக்க வேண்டும். எனினும் 30 வீதமான மாணவர்களது அடையாள அட்டை விண்ணப்பங்களே எமக்குக் கிடைத்துள்ளன. எனவே, அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை விரைவில் அனுப்பி வைக்கும் படி அதிபர்களை வேண்டுகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.