ஒன்லைன் கற்றல் கற்பித்தல் மற்றும் வீடியோ கொன்பரன்சிங் முதலியவற்றுக்கு பரவலாகப் பயன்படுத்தி வந்த ZOOM செயலிக்கு போட்டியாக மாற்றீட்டு Messenger செயலியின் மேம்படுத்திய பதிப்பை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று இந்த பதிப்பு (Version) அனைவருக்குமானதாக Update செய்யப்பட்டுள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்புக் (Messenger) மெசன்ஞரில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு Room என பேஸ்புக் பெயரிட்டுள்ளது.
Messenger Room ஐ Desktop இலும் Mobile இலிலும் பயன்படுத்த முடியும்.
ஒரே முறையில் 50 பேர் வரை மிக இலகுவாக இணைந்து கொள்ளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Messenger Room இல் மேம்படுத்தப்பட்ட வீடியே செட் வசதியுள்ளது.
Facebook App பேஸ்புக் செயலி ஊடாக அல்லது மெசன்ஞர் செயலி Messenger App ஊடாக Messenger Room இல் இணைந்து கொள்ள முடியும். நியுஸ் பீட் News Feed அல்லது குரூப் Group அல்லது நிகழ்வுகள் Event பகுதியின் ஊடாக வீடியோ செட்டுக்கானMessenger Room ரூமை ஆரம்பிக்க முடியும்.
விசேடமான அம்சம் என்னவென்றால், பேஸ்புக் கணக்கில்லாத பயனாளர்களும் இதில் இணைந்து கொள்ள முடியும்.
Android Police |
மெசன்ஞர் செயலி இல் பீபல் People பகுதியின் ஊடாக ரூம் உருவாக்க முடியும். அவ்வாறு உருவாக்கப்படும் ரூமுக்கு பெயர் வழங்கி, யார் அதில் இணைந்து கொள்ள முடியும் என்ற வரையறைகளை வழங்க முடியும். நண்பர்களுக்கு எனில் செட் லிங்க் Chat link ஊடாக, நண்பர்கள் பட்டியலில் உள்ள யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரூம் இல் வீடியோ சிறந்த தரத்தில் உள்ளது. மெசஞ்சரில் காணப்பட்ட அம்சங்களான ஏஆர். பில்டர், (AR Filters) வீசுவல் பெக்கிரவுண்ட் (virtual background) முதலானவற்றையும் ரூம் இல் பயன்படுத்த முடியும்.
ஆனால், இந்த தொடர்பாடல் தொடர்பிலுள்ளவர்களுக்கு மாத்திரமான End to end Encrypted என்கிரிப்ட் இல்லை. ஆனால் ரூம் செயற்பாடுகள் தொடர்பாக பேஸ்புக் இற்கு முறைப்பாடு Report செய்ய முடியும்.
இந்த ரூம் வசதி பேஸ்புக் மாத்திரமின்றி வட்சப் பீடா Beta version வெர்சன் க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வட்சப் இன் சாதாரண பயன்பாட்டுக்கு வருவதற்கு சிறிது காலம் எடுக்கக் கூடும்.
இது online கற்பித்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.
Jey/teachmore.lk