கொரோனா காலத்தில் அதிகமாக வீடியோ கொன்பசன்சிங் செயலிகளே தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
Priori என்ற ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகள்படி, வீடியோ கொன்ஃபரன்ஸிங் பயன்பாட்டுக்காக, பல செயலிகள் இருந்தாலும், உலகம் முழுவதும் zoom, Skype, House party என்ற மூன்று செயலிகளை அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் 21 லட்சம் முறை வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் 27 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
மார்ச் மாதம் தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகளில் zoom செயலி முதலிடத்தைப் பிடித்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 269 லட்சம் பேர் இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்துள்ளனர்.
இரண்டாவதாக skype செயலியை 62 லட்சம் பேரும், அடுத்ததாக house party செயலியை 52 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கைய்யின் அடிப்படையில் skype செயலி முதலிடத்தில் உள்ளது. இச்செயலியை தினமும் 591 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.
அடுத்ததாக zoom செயலியை 43 லட்சம் பேரும், house party செயலியைத் தினமும் 1 லட்சம் பேர் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
Very useful information