பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பாக கோவிட் 19 ஜனாபதி செயலணி ஆராந்துள்ளது.
நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற செயலணியின் கூட்டத்தின் போதே பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இதன் போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர், கொரோனா தடுப்புக்கான சுகாதார முன்னெடுப்புக்கள் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாணவர்களை இலக்கு வைத்த ஊடக பிரச்சாரங்களை முன்னெடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீளத் திறப்பதோடு, உடற்பயிற்சி நடைசாலைகளையும் மீளத் திறப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
teachmore.lk