மீள் திருத்தின் பின்னரான புதிய இஸட் புள்ளிகளை நாளை வெளியிட எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
புதிய இசட் புள்ளிகளின்படி 477 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளதுடன், முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் 500 மாணவர்கள் இடம் மாறியுள்ளனர்.
இந்த ஆண்டு மீள் திருத்தம் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே இசட் மதிப்பெண்களை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்படி, கடந்த ஒக்டோபர் 29 ஆம்திகதி இஸட் புள்ளிகள் வெளியிடப்பட்டன. அதற்கேற்ப பதிவுகள் நிறைவு பெற்றுள்ளன.
மீள் திருத்த்தின்பின்னர், அனுமதி வழங்கப்படும் மாணவர்கள் விரைவில் பதிசு செய்யப்படுவர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டு்ளளது.
மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக வாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளுடனேயே முன்னர் இஸட் புள்ளிகள் தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.