பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்வது தொடர்பான புதிய சட்டதிட்டங்கள் அடங்கிய சுற்றுநிருபம் ஒன்று அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்காெண்டுள்ளதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கந்தளாய் கோமரங்கடவல மதவாச்சி குளத்தில் குளிக்கும் போது நான்கு மாணவர்கள் மூழ்கி மரணமான நிகழ்வு தொடர்பான விசாரணைகளை அடுத்து கல்வி அமைச்சு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
கல்விச் சுற்றுலாக்களை ஒழுங்கு படுத்தும் போது தூரம் தொடர்பாக தற்போதைய சுற்று நிருபத்தை விட புதிய சுற்றுநிருபம் புதிய பல நிபந்தனைகளை உள்ளடக்கியுள்ளது.
அதற்கு மேலதிகமாக, பார்ப்பதற்கு எதிர்பார்க்கும் இடங்கள், தங்குமிடங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை வழங்கும் வகையில் புதிய சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய நிபந்தனைகள் அடங்கிய சுற்று நிருபம் மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hi Google