இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் இயங்கும் 5ஜி இணையசேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
5 ஜி சேவையைப் பெறுவதற்கு ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்ததாகவும், ஹூவேய் மற்றும் ஸியோமி நிறுவன செல்போன்கள் ஏற்கனவே 5ஜி தொழில்நுட்பம் கொண்ட போன்களை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.