ஆசிரியர் கல்வியியலாளர்கள் 1500 பேரை புதிதாக இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேவைக்கேற்ப கல்வித் துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், பாடத்திட்டங்களும் காலத்திற்கு பொருத்தமான வகையில் மாற்றப் படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
குளியாப்பிடடி மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கு, நீச்சல் தடாகம், பற் சிகிச்சைக் கூடம் மற்றும் கேட்போர் கூடம் ஆகியவற்றை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவைக்கு புதிதாக 1500 பேர் விரைவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.