தமிழ் சிங்கள பாடசாலைகள் எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணைக்காக விடுமுறை வழங்கப்பட்டு செப்டம்பர் 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் ஓகஸ்ட் 9 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் 12 ஆம் திகதி தியாகத் திருநாள் ஹஜ் பண்டிகை கொண்டாடப்பவுள்ளதாலும் 15, 16 ஆகிய தினங்கள் வியாளன் வெள்ளி என்பதனாலும் குறித்த இரு தினங்களுக்கும் விடுமுறையை வழங்கிவிட்டு மீண்டும் 19 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பித்து, குறிப்பிட்ட இரு நாட்களுக்கும் பதில் நாட்களில் பாடசாலையை நடாத்தும் படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் ஹலீம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கை குறித்து கல்வி அமைச்சு இன்னமும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது