பொது நிருவாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு
இலங்கை நிர்வாக சேவையின் தரம் 111 இற்கு ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2018 (2019)
இலங்கை நிர்வாக சேவையின் தரம் 111 இன் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்காகத் தகைமைபெற்ற இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இப்பரீட்சை அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் விதி ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டு பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 2019 நவெம்பர் மாதம் கொழும்பு மாவட்டத்தில் நடாத்தப்படவூள்ளது.
இப்பரீட்சையை ஒத்திவைக்க அல்லது இரத்துச் செய்வதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அறிவூறுத்தல்களுக்கு உட்பட்டவகையில்
செயலாளருக்கு அதிகாரமுண்டு.
1. இவ் அறிவித்தலிலுள்ள சொற்பதங்களான-
(அ) ”செயலாளர்”” எனும் பதம் ”பொது நிர்வாக அமைச்சின் விடயப் பொறுப்புச் செயலாளர்”” எனப்பொருள்படும்.
(ஆ) ”சேவை”” எனும் பதம் வேறு எவ்விதத்திலும் விசேடமாக குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில் ”இலங்கை நிர்வாக சேவை”” எனப் பொருள்படும்.
2. இலங்கை நிர்வாக சேவையின் தரம் 111 இற்கான ஆட்சேர்ப்பானது இப்பாPட்சையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2019.08.19 ஆந் திகதியாகும்.
எழுத்துப் பரீட்சை.- இப்பரீட்சையானது பின்வரும் நான்கு (04) வினாத்தாள்களைக் கொண்டிருக்கும் :-
(1) பொது விவேகம்
(2) இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் பின்னணியூம் உலகளாவிய போக்குகளும்
(3) அரசாங்க நிர்வாகத்துடன் தொடர்புபட்ட விடய ஆய்வூ ! (தாபன விதிக்கோவை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் நடைமுறை விதிகள் மற்றும் நிதிப்பிரமாணங்கள் என்பவை சார்ந்தவை)
(4) அரசாங்க நிர்வாகத்துடன் தொடா்புபட்ட விடய ஆய்வூ 11 (ஆக்கபூவமான பகுப்பாய்வூ ரீதியான மற்றும் தொடர்பாடல் திறன்கள் என்பவற்றின் மதிப்பீடு சார்ந்தது).
நேர்முகப் பரீட்சை.- எழுத்துப் பரீட்சையின் சகல வினாத்தாள்களிற்கும் தோற்றி அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் வரையறுக்கப்பட்டவாறு போதுமான உயர் மொத்தப் புள்ளிகளைப் பெற்றுள்ள பரீட்சார்த்திகளுக்கு
பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையானது நடாத்தப்படும். நேர்முகப் பரீட்சைக்கான திகதியானது
அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் ஆலோசனைப்படி செயலாளாரினால் நிரீணயிக்கப்படும்.
3. நியமிக்கப்படவூள்ள ஆட்களின் எண்ணிக்கை 54 ஆகும். இறுதி வெற்றிடம் அல்லது இறுதியான சில
வெற்றிடங்களுக்காக சமமான புள்ளிகளைப் பெற்றுள்ள பரீட்சாரீத்திகள் காணப்படும் நிலைமைகளில் அத்தகைய வெற்றிடங்களை நிரப்புவதற்கான தீரீமானமானது நடைமுறை விதிகளின் பிhpவூ 80 இற்கமைய அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் மூலம் எடுக்கப்படல் வேண்டும். நியமனம் நடைமுறைக்கு வரும் திகதியானது அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் பணிப்பின் போpல் நிh;ணயிக்கப்படல் வேண்டும்.
4. சேவை நிபந்தனைகள் :
4.1 அரசாங்க சேவையிலுள்ள நியமனங்களை நிர்வகிக்கும் பொது நிபந்தனைகளுக்கு உட்பட்டும் மற்றும் 2013.12.23 ஆந் திகதிய 1842ஃ 2 ஆம் இலக்க இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின்
பிரமாணக் குறிப்பில் காட்டப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் பிரமாணக் குறிப்பில் மேற்கொள்ளப்பட்ட ஏதேனும் திருத்தங்கள் அல்லது இதனகத்துப் பின்னர் மேற்கொள்ளப்படவூள்ள திருத்தங்கள்இ தாபன விதிக்கோவையின் நிதிப்பிரமாணங்கள், 2009.02.20 ஆந் திகதிய 1589ஃ 30 ஆம் இலக்க இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகள் என்பவற்றின் அடிப்படையில் தெரிவூசெய்யப்பட்ட பரீட்சார்த்தி ஒருவர் சேவையின் தரம் 111 இற்கு நியமிக்கப்படுவார்
4.2 இப்பதவி நிரந்தரமானதும் ஓய்திய உhpத்துடையதுமாகும். விதவைகள்இ அநாதைகள் ஓய்வதியத் திட்டம்/ தாரா;இ அநாதைகள் ஓய்தியத் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்தல்
வேண்டும்.
4.3 நியமனமானது ஒரு வருட வேலை பாh;க்கும் காலப்பகுதிக்கு உட்பட்டதாகும். சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டவாறு இலங்கை நிh;வாக சேவையின் தரம் 111 இற்கு
ஆட்சோ;ப்புச் செய்த திகதியிலிருந்து 3 வருடத்திற்குள் முதலாவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சையானது சித்தியெய்தப்படல் வேண்டும்.
4.4 அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 01/2014 மற்றும் தொடா;ந்து வரும் சுற்றறிக்கைகள் ஆகியவற்றுக்கிணங்க சேவையில் இணைந்து 5 வருடத்திற்குள் குறித்துரைக்கப்பட்ட அரச கரும மொழித் தேர்ச்சியானது பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
4.5 நியமிக்கப்பட்ட பதவியின் கடமைகளை உhpய திகதியில் பொறுப்பேற்கத் தவறுகின்ற மற்றும்/ அல்லது தான் நியமிக்கப்படும் பிரதேசம் ஒன்றில் சேவையாற்ற மறுக்கின்ற அல்லது தவிh;க்கின்ற ஏதேனும் பாPட்சாh;த்தியின் நியமனத்தினை இரத்துச்செய்வதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கட்டளைப்படி அதிகாரம் உண்டு.
5. மாதாந்த சம்பள அளவூத்திட்டம்.- 03/ 2016 ஆம் இலக்க 2016.02.25 ஆந் திகதிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையின் உப அட்டவணை 1 இன்படி இப்பதவிக்கு உரித்துடைய மாதாந்த சம்பள அளவூத்திட்டம் ரூபா 47615 –
10 x 1335 – 8 x 1630 – 17x 2170 – ரூபா 110895 (SL-1-2016) ஆகும். இச்சம்பளம் குறித்த சுற்றறிக்கையின் உப அட்டவணை 11 இன் சட்டதிட்டங்களின் படியே வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக அரசாங்க அலுவலா;களுக்கு
அரசினால் காலத்துக்குக்காலம் வழங்கப்படும் வேறு படிகளும் உங்களுக்கு உhpத்தாகும்.
6. ஆட்சோ்ப்பதற்கான தகுதி :
(அ) (i) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்
(ii) நன்நடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்
(iii) நாட்டின் எப்பகுதியிலும் சேவையாற்றுவதற்கான உள மற்றும் தேகாரோக்கியத்துடனும் இருத்தல் வேண்டும்.
(ஆ) கல்வித் தகைமைகள் மற்றும் அனுபவம் :
(i) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகாpக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும்
அத்துடன்
அரசாங்க சேவையில் அல்லது மாகாண அரசாங்க சேவையில் நிரந்தர ஓய்வ+திய உரித்துடைய பொது நிர்வாகச் சுற்றறிக்கை இலக்கம் 03/ 2016 இல் சம்பளக் குறியீட்டு இலக்கம் எம்.என். 2-2016 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.என். சம்பளக் குறியீட்டு இலக்கத்தின் கீழ் சம்பளம் பெறுகின்ற அல்லது எஸ்எல்.1-2016 சம்பளக் குறியீட்டு இலக்கத்தின்கீழ் சம்பளம் பெறுகின்ற
சேவையில்/ பதவியில் குறைந்தபட்சம் ஐந்து (05) வருட முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக்காலத்தைப் பூர்த்திசெய்துள்ள அலுவலராக இருத்தல்
அல்லது
(ii) அரசாங்க சேவையில் அல்லது மாகாண அரசாங்க சேவையில் நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய பொது நிh;வாகச் சுற்றறிக்கை இலக்கம் 03/ 2016 இல் சம்பளக் குறியீட்டு இலக்கம் எம்.என். 2-2016 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.என். சம்பளக் குறியீட்டு இலக்கத்தின் கீழ் சம்பளம் பெறுகின்ற அல்லது எஸ்.எல். 1-2016 சம்பளக் குறியீட்டு இலக்கத்தின் கீழ் சம்பளம் பெறுகின்ற
சேவையில்/ பதவியில் குறைந்தபட்சம் பத்து (10) வருட முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக்காலத்தைப் பூத்திசெய்துள்ள அலுவலராக இருத்தல்.
குறிப்பு :
(1) முதற் பட்டமொன்று அல்லது பட்டப்பின் பட்டத்தைப் பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்பிக்க முடியூம். ஆட்சேர்ப்புக்காக அடிப்படைத் தகைமையாக ஏற்றுக்கொள்ளப்படும் பட்டப்பின் பட்டத் தகைமை தரமுயர்வூகளுக்கு மாதிரியாகக் கொள்ளப்படக்கூடாது.
(2) பட்டம் நடைமுறைக்கு வரும் திகதியானது 2018.07.01 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னராக இருத்தல் வேண்டும்
(3) மேற்குறிப்பிடப்பட்ட சேவைக்காலத்தைக் கணிப்பிடும் போது அரசாங்க சேவையில் அத்துடன்/ அல்லது மாகாண அரசாங்க சேவையிலுள்ள தொடா;ச்சியான சேவைக்காலத்தின் மொத்தமானது கருத்திற்கொள்ளப்படும்.
(இ) வயது மற்றும் பூர்த்திசெய்திருக்க வேண்டிய ஏனைய தகைமைகள் :
(i) 2018.07.01 ஆந் திகதியன்று வயதெல்லை ஐம்பத்து மூன்று (53) வருடத்திற்கு மேற்பட்டதாக இருத்தலாகாது. அதற்கிணங்க 1965.07.01 ஆந் திகதிக்கு அல்லது அதற்கு பின்னர் பிறந்ததிகதி அமைந்திருக்கும் ஆட்களுக்கு மாத்திரம் விண்ணப்பிப்பதற்கான தகைமை காணப்படுகின்றது
(ii) மேலே 6 (ஆ) இல் குறிப்பிடப்பட்ட சேவை/ பதவி ஒன்றில் நிரந்தரப் பதவி உறுதித்தன்மையைப் பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு : இதுவரை குறித்த நியமன அதிகாரியால் சேவையில் நிரந்தரப்படுத்துவதற்குரிய கடிதம் வழங்கப்பட வில்லையாயினும் பரீட்சை அறிவித்தல் 06 ஆம் பந்திக்கு ஏற்ப பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அவசியமான சகல தகைமைகளையூம் பூர்த்தி செய்துள்ள மற்றும் குறித்த சேவைப் பிரமாணம்ஃ ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு ஏற்ப சேவையில் நிரந்தரப்படுத்துவதற்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள அலுவலர்களுக்கும் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியூம்.
ஆயினும் அவ் அலுவலர்கள்-
(1) சேவையில் உறுதிப்படுத்துவதற்குரிய வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைத் தகைமைகளைப் பஷுர்த்தி செய்யவேண்டிய திகதியில் பஷுர்த்தி செய்திருக்க வேண்டும்.
(2) அவ் அலுவலர்கள் இப் பரீட்சையில் சித்தியடைந்து சாதாரண நேர்முகப் பரீட்சைக்குத் தகைமை பெறுவாராயின் நேர்முகப் பரீட்சைக்கு உட்படும் சந்தர்ப்பத்தில் சேவையில் உறுதிப்படுத்தல் கடிதத்தை சமர்பிப்பது கட்டாயமாகும். (உறுதிப்படுத்தல் திகதி தகைமைகளைப் பூர்த்தி
செய்யவேண்டிய திகதி அல்லது அதற்கு முன்னராக வலுவிலிருத்தல் வேண்டும்.)