இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
கத்தோலிக்க மறைப் பாடசாலை – இறுதிச் சான்றிதழ் பரீட்சை – 2018 (2019)
சட்ட விதிமுறைகள் :
1. கத்தோலிக்க மறைப் பாடசாலை இறுதிச் சான்றிதழ்ப் பரீட்சையானதுஇ பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 2019 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் இதற்கென அமைக்கப்படும் பரீட்சை நிலையங்களில் நடாத்தப்படும்.
2. பரீட்சை நிலையம்.- நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பதாரரின் எண்ணிக்கைக்கேற்ப பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும். இருப்பினும் குறிப்பிட்ட ஒரு பரீட்சை நிலையத்தில் போதியளவூ விண்ணப்பதாரர்கள் இல்லாவிடின் அப்பரீட்சை நிலையம் இரத்துச் செய்யப்பட்டு, அதற்குரிய விண்ணப்பதாரர்கள் அதற்கு
அண்மையிலுள்ள பரீட்சை நிலையத்தில் மேற்படி பரீட்சைக்கு அனுமதிக்கப்படுவர். பரீட்சை நிலையங்கள் நிறுவப்படும்
மாவட்டங்கள் மற்றும் நகரங்களடங்கிய பட்டியல் இணைப்பு 1 இல் தரப்பட்டுள்ளன.
3. ஊடக மொழி.- இப்பரீட்சை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் மாத்திரம் நடைபெறும்.
4. தகுதி.- இப்பரீட்சைக்கு விண்ணப்பிப்போர் கீழ்வருவனவற்றில் ஏதேனும் ஒரு தகைமையைப் பெற்றிருக்க வேண்டும்.
4.1 மறைப் பாடசாலையொன்றில் பத்தாம் தரத்தில் சித்தி பெற்று மறைப் பாடசாலையின் இறுதிச் சான்றிதழ் பத்திர வகுப்பில் ஒரு வருடம் கல்வி பயின்றிருத்தல்
4.2 தேசிய கல்விப் பொதுத்தராதரப் பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் அல்லது கல்வி பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் கத்தோலிக்க மறை (கிறிஸ்தவ மறை றௌ. க.) பாடத்தில் சித்தி
பெற்றிருத்தல். அல்லது சிரேட்ட பாடசாலை சான்றுப்பத்திர பரீட்சையில் கத்தோலிக்க மறை (கிறிஸ்தவ மறை றௌ. க.) பாடத்தில் சித்தி பெற்றிருத்தல்.
4.3 அந்தந்த மறை மாவட்டத்தில் நடைபெறும் வருடாந்த மறைக்கல்வி பரீட்சையில் பதினோராந்தர வகுப்பில் சித்திபெற்றிருத்தல