தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவது கட்டாமில்லை என்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக அகில விராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.
தரம் 5 பலமைப் புரிசில் பரீட்சை கட்டாமில்லை என்பதை கடந்த வருடம் கல்வி அமைச்சர் கருத்தாகக் கூறியிருந்தார்.
ஜனாதிபதி அண்மையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இதற்கிடையில் புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை என்பதை உறுதிப்படுத்தும் சுற்றுநிருபம் கல்வி அமைச்சின் செயலாளரால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாடசாலையின் அனைத்து மாணவர்களையும் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும்படி பாடசாலை நிர்ப்பந்திக்க முடியாது என்பதோடு பெற்றார் தமது பிள்ளை புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்பதை பாடசாலை நிர்வாகத்திற்கு அறியப்படுத்தினால் அவ்வாறு கிடைக்கும் அறிவித்தலுக்கு ஏற்ப பாடசாலை நிர்வாகம் நடந்து கொள்வது கடமையாகின்றது என்பதை இச்சுற்றுநிருபம் உறுதிப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.