Royal Institute சர்வதேச பாடசாலையின் நுகேகொடை கிளையை இடித்து அகற்றுமாறு நேற்று (03) உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த காலத்தில் குறித்த பாடசாலையின் கட்டடம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்களை பரிசீலனைக்கு உட்படுத்தியதன் பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தது.
அதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பாடசாலை கட்டடத்தை இடித்து அகற்றுமாறு அறிவிக்கப்பட்டது.