2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளின் போது கடமையில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்னமும் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
பரீட்சை நடைபெற்று மூன்று மாதங்களாகியும் இன்னமும் கடமைக்கான கொடுப்பனவு வழங்கப்படாமை பெரிய தொருஏமாற்றமாகும். திறைசேரி இதற்கான கொடுப்பனவுகளை இன்னமும் ஒதுக்காமை இதற்கான காராணமாக கூறப்படுகின்றது.
வருடத்தில் மூன்று பிரதான பொதுப் பரீட்சைகள் நடைபெறுகின்றன. இதற்கான கொடுப்பனவு ஒதுக்கீடுகள் வழமையான நடைமுறையில் இடம்பெறுகின்றன. எனினும் இன்னமும் கொடுப்பனவு வழங்கப்படாமை இதற்கான ஓழுங்கான திட்டம் ஒன்று காணப்படவில்லை என்பதையே காண்பிக்கின்றது.
உரிய காலப்பகுதியில் கொடுப்பனவை வழங்குவது பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கடமையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் .