இவ்வருடம் ஒரு சூரிய கிரணமும் இரு சந்திர கிரகணமும் ஏற்படவுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழக பௌதீக விஞ்ஞான கற்கைகள் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 21 ஆம் திகதி மற்றும் ஜூலை 16 ஆம் திகதி ஆகிய நாட்களில் சந்திர கிரணம் ஏற்பட வுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் முதலாவது சூரிய கிரணம் கடந்த 6 ஆம் திகதி நிகழ்ந்தாகக் குறிப்பிடும் அவர், ஜூலை 2 மற்றும் டிசம்பர் 26 ஆகிய நாட்களிலும் சூரிய கிரகணம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையர்களுக்கு ஜுலை 16 ஆம் திகதி ஏற்படும் அரை சந்திர கிரணம் மற்றும் டிசம்பர் 26 ஏற்படும் சூரிய கிரணம் ஆகியவற்றை மாத்தரமே காண முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.