கேட்டது சுபோதினி அறிக்கையின் படி சம்பள முரண்பாட்டுத் தீர்வு
2018 இன் பிரேரணைகளையே அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
சுபோதினி அறிக்கையின் படி, அதன் முதற்பகுதி வழங்கப்படும் வேண்டும் என்று நாம் கோரினோம். எனினும் தற்போது 2018 இன் பிரேரணைகள் கட்டங்கட்டமாக அமுலாகும் வகையில் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக ஆராயந்து அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் தீர்வுகள் தொடர்பான முடிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளின் பின்னர், மகிந்த ஜயசிங்க கருத்துத் தெரிவித்தார்.
இது நாம் கோரியதல்ல. தற்போது இடைக்காலமாக தருபவற்றை நாம் எதிர்க்கப்போவதில்லை. ஆனால் நாம் கோரிய சுபோதினி அறிக்கையின் படியான தீர்வே வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
இன்று ஏனைய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திய பின்ன போராட்டத்தின் இறுதி தீர்மானம் தொடர்பாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.