இன்று (14ம் திகதி) முதல் வழக்கம் போல் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் போது சுகாதார ஏற்பாடுகள் பின்பற்றப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பாடசாலைகளில் மாணவர்வளுக்கு கோவிட் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான சுகாதார வசதிகளை பாடசாலை நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறியுள்ளார்.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பாடசாலைகள் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொவிட் வைரஸ் தடுப்பூசி போடப்படவில்லை எனவும், அவர்களை கொவிட் வைரஸிலிருந்து பாதுகாக்க பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார வழிகாட்டுதல்களின்படி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு பெற்றோரை வலியுறுத்துகின்றனர்.