பாடசாலைக் கற்பித்தல் காலத்தை ஒரு மணி நேரத்தால் அதிகரிப்பதற்கான தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
திங்கள் 18 முதல் ஆரம்பமாகும் கல்வி வருடத்தி்றகான 139 நாட்களும் ஒரு மணித்தியாலம் அதிகரிக்கப்பட்டு கற்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு ஏற்கனவே சுற்றுநிருபம் வாயிலாக அறிவித்திருந்தது.
இத்தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு பல்வேறு தரப்புக்கள் கல்வி அமைச்சுக்கு அழுத்தம் கொடுத்த பின்னணியில்
அந்த தீர்மானத்தையே இடைநிறுத்துவதாக தற்போது அறிவித்துள்ளது.