ஒடுக்குமுறை அரசுக்கு எதிரான எதிர்ப்பு நாளாக ஏப்ரல் 20 அதாவது நாளை, அனைத்து அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டணியும் வெகுஜன சிவில் அமைப்புகளும் கூட்டாக அறிவித்துள்ளன .
எனவே நாளைய தினம் கடமைக்குச் செல்லும்போது கறுப்பு நிற ஆடை அணிந்தும் கறுப்பு நிற பட்டி அணிந்தும் செல்லுமாறு அறியத்தருவதோடு..
அன்றையத்தினம் ஏனைய தொழிற் சங்கங்களுடன் இணைந்து அவ்வப்பிரதேசங்களில் போராட்டங்களை நடத்துவதுடன், பாடசாலைகள் கல்வி அலுவலகங்களில் கறுப்பு நிற கொடியேற்றி எதிர்ப்பை வெளிப்படுத்துமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கோரியுள்ளார்.
இதே நேரம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 20 ஆம் திகதி மதியம் 12.30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.