நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு காரணமான கோட்டாபய ராஜபக்ச உட்பட அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அரச, அரை அரச, தனியார் மற்றும் மலையக துறையினர் அனைவரும் இணைந்து ஏப்ரல் 28 ஆம் திகதி ஏற்பாடு செய்யும் வேலை நிறுத்தத்தில் தாமும் பங்கேற்பதாக அதிபர், ஆசிரியர் தொழில்சங்கத்தின் கூட்டணி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்தல் விடுத்துள்ள கூட்டணி, ஏப்ரல் 25 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் நடாத்திய போராட்டம் தொடர்பாக விளக்கமளித்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக அனைத்துத் தரப்பினரும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். தற்போதைய அரசாங்கம் இதற்கு நேரடியாகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர்.