Annual Teachers Transfer 2022/2023 வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களுக்கான விண்ணப்பம் கோரல் – 2022/23,
சபரகமுவ மாகாணத்தில் உள்ள மாகாண சபை பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் (கல்வி வலயத்தினுள் /வலயங்களுக்கிடையில் / மாகாணங்களுக்கு இடையேயான மற்றும் தேசிய பாடசாலைகள்) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இதன் கீழ், 2022 ஆம் ஆண்டு 12.31 க்குள் சப்ரகமுவ மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் 5 வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து ஆசிரியர் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் அவ்வாறு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் சப்ரகமுவ மாகாணத்தில் எந்த இடத்துக்கும் இடமாற்றங்கள் பெற விரும்புவதாகக் ஆகக் கருதப்படும்.
01.01.2023 முதல் கல்வி வலயத்தினுள் மற்றும் வலயங்களுக்கிடையில் ஆசிரியர் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டு ஆசிரியர் இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் SIPTHATHU தரவுத்தளம் மூலம் ஒன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். நிகழ்நிலையில் மாத்திரம் இதனை சமர்ப்பிக்க முடியும் இதனைத் தவிர வேறு எந்த ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பப் படிவத்தையும் விண்ணப்பத்திற்குப் பயன்படுத்தக்கூடாது.
விண்ணப்பங்களை நிகழ்நிலையில் சமர்ப்பிக்க இங்கே க்லிக் செய்யுங்கள்
நிகழ்நிலை விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலம்
ஆசிரியர்கள் அதிபர்களுக்கு எதிர்வரும் 2022.08.01 க்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்
அதிபர்களின் பரிந்துரையுடன் வலயக் கல்வி பணிப்பாளருக்கு 2022.08.15 க்கு முன்னர் சமர்ப்பிக் வேண்டும்
வலயக் கல்விப் பணிப்பாளர்களின் சான்றுப்படுத்தல்களுடன் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு 022.09.01 க்கு முன்னர் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் ட வேண்டும்.
மாகாணக் கல்விப் பணிப்பாளர் 2022.09.15 க்கு முன்னர் மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிவித்தல் இங்கே க்லிக் செய்யுங்கள்