அரச ஊழியர்கள் பணிக்கு வருவதற்கான சலுகை நாளையுடன் நிறைவு
அத்தியவசியமான அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் நாளை மாத்திரமே நடைமுறையில் இருக்கும் என்று அரச நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 17ம் திகதி அரச நிருவாக அமைச்சினால் வௌியிடப்பட்ட குறித்த சுற்றுநிருபம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் அனைத்து அரச ஊழியர்களும் பணிக்கு சமூகமளிப்பதுடன் அரச நிறுவனங்கள் வழமைப் போன்று செயற்படும் என்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம். பி. கே மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய எரிபொருள் பற்றாக்குறை நீக்கப்பட்டு, நாடு வழமைக்கு திரும்பியுள்ளமையினால் பொதுப் போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு திரும்பும் என்று செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபை பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
රජයේ සේවකයන්ට සේවයට පැමිණීමට ලබාදී තිබූ සහනය හෙටින් අවසන්
අත්යාවශ්ය රාජ්ය සේවකයින් සේවයට කැඳවීමේ චක්රලේඛය හෙට දිනයේ පමණක් ක්රියාත්මක වන බව රාජ්ය පරිපාලන අමාත්යාංශය පවසයි.
රාජ්ය පරිපාලන අමාත්යාංශය ජූනි 17 වැනිදා නිකුත් කළ චක්රලේඛය හෙටින් අවසන් වන බැවින් සියලුම රාජ්ය සේවකයන් සේවයට වාර්තා කිරීම අවශ්ය අතර රාජ්ය ආයතන සාමාන්ය පරිදි ක්රියාත්මක වේ.
රටේ ඉන්ධන හිඟය පහව ගොස් රට සාමාන්ය තත්ත්වයට පත්ව ඇති බැවින් පොදු ප්රවාහන සේවා ද යථා තත්ත්වයට පත් වනු ඇති බවයි ලේකම්වරයා බී. කේ මායාදුන්න මහතා පැවසීය.
මේ සම්බන්ධයෙන් සියලුම අමාත්යාංශ ලේකම්වරුන්, පළාත් සභා ප්රධාන ලේකම්වරුන් සහ දෙපාර්තමේන්තු ප්රධානීන් වෙත චක්රලේඛයක් යවා ඇති බව ද අමාත්යාංශයේ ආරංචි මාර්ග සඳහන් කළා.