வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப், வைபர், இமோ மற்றும் ஐ மெசஞ்சர் போன்ற சமூக ஊடகங்களை இலவசமாக வழங்குவதாக முன்னாள் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன அறிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் கணக்கில் நேற்று எழுதிய குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவருடைய பதிவின் முழு விபரங்கள் பின்வருமாறு.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் நிவாரணத் திட்டங்களுக்கு உதவும் வகைநில் முன்னாள் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான நான், இலங்கை தொலைத் தொடர்பு தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்தி பெரேரா மற்றும் மொபிடெல் தலைமை நிர்வாக அதிகாரி நலின் பெரேரா ஆகியோருடன் மக்களுக்கு வழங்க்கூடிய சலுகைகள் தொடர்பாக கலந்துரையாடினேன்.
அதன்படி,“தற்போது, Telecom தனது வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப், வைபர், இமோ மற்றும் ஐ மெசஞ்சர் போன்ற முழு அளவிலான சமூக ஊடகங்களை வழங்க முடிவு செய்துள்ளது. இது ஏற்கனவே நடைமுறையிலுள்ளது.”
“இதே நிவாரணத்தை மொபிடெல் மூலம் வழங்குமாறு நான் கோரிக்கை விடுத்துள்ளேன். அடுத்த சில மணிநேரங்களில் நிறுவனம் இது தொடர்பாக அறிவிப்புக்கள் வரக்கூடும். ஏனைய தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இவ்வகை நிவாரணங்களை வழங்கும் என எதிர்பார்க்கிறேன்.
லக்ஷ்மன் யபா அபேவர்தன
முன்னாள் தகவல் மற்றும் தொடர்பு அமைச்சர்
என குறிப்பிடப்பட்டுள்ளது