நெருக்கடி காலத்தில் பாடசாலை வரமுடியாத ஆசிரியர்களின் விடுமுறையை தனிப்பட்ட விடுமுறையாகப் பதிவதற்குப் பதிலாக அதற்கான தீர்மானங்கள் அடங்கிய அறிவுறுத்தல்களை எழுத்துமூலம் வெளியிடுமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது கடைப்பிடிக்கப்படும் தனிப்பட்ட விடுமுறையாகப் பதியப்படும் நடைமுறை தொடருமானானல் அதற்கு எதிராக கடும் தொழிற்சங்கப் போராட்டங்களை ஆரம்பிக்கத் தயங்கப் போவதில்லை என்று ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
கல்வ அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவிற்கு கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எரிபொருள் பிரச்சினையைத் தீர்த்து எழுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, ஆரோக்கியமான கற்றல் கற்பித்தல் சூழலை ஏற்படுத்துவதை உறுதி செய்யுமாறும் கூட்டமைப்பு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.