இலங்கையின் மாவட்டங்களுக்கு ஏற்ப உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டை வெளியிடுவதற்கு (Official poverty line by District) மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 2022 மே மாதத்திற்கான தேசிய மதிப்பானது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய (Minimum Expenditure per person per month to fulfill the basic needs) ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 11,219 ரூபா குறைந்தபட்ச செலவினமாக கணக்கிடப்படப்பட்டுள்ளது.
அதன்படி, 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்சச் செலவு ரூ. 44,876 என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மாவட்ட அளவில் மாறுபடுகிறது, அதன்படி ஒரு மாதத்திற்கான வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக உள்ளது
மார்ச் 2022ல் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்ச செலவு ரூ. 9,284 பதிவாகியதோடு ஏப்ரலில் ரூ. 10,230 பதிவாகியுள்ளது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 மே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) மதிப்பே உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் அதிகரிப்புக்குக் காரணம் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.